


குரு பூர்ணிமா அகண்ட நாமஜபம் செய்வதன் மூலம் குருவின் ஆசிர்வாதம், மன அமைதி, ஆன்மீக வளர்ச்சி, துன்பங்கள் நீங்குதல் போன்ற எல்லா நலன்களும் கிடைக்கும்.
திருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம், பத்தாம் திருமுறை
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
Meaning:
It is for all, (to offer) a green (fresh) leaf to God.
It is for all, (to provide) a mouthful of food for the cows
It is for all, (to donate) one handful of food when eating,
It is for all, (to speak) pleasant words to others.
இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர்.