Friday, February 24, 2017

Maha Sivaratri 24-2-2017


Maha Sivaratri Puja in Ramakrishna Mission Ashrama, Colombo.

Photo Album 1                                            Photo Album 2

திருச்சிற்றம்பலம்
பதிக எண்: 6.32      திருவாரூர்                     திருத்தாண்டகம்
பின்னணி:
அப்பர் பிரான் திருவாரூர் வருகின்றார் என்பதை அறிந்துகொண்ட தொண்டர்கள், அந்த ஊர் எல்லையில் ஒன்றாகத் திரண்டு, சமண மதத்தின் மாயையைக் கடந்து, சிவபிரானின் அருளால் தான் பிணைத்துக் கட்டப்பட்டு இருந்த கல்லே மிதப்பாக மாற அதன் உதவியுடன்  கரையேறிய அப்பர் பிரான் வந்தார் என்று கொண்டாடி அவரை வரவேற்றனர். மேலும் தங்களது வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்து அப்பர் பிரானின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டியதை தெரிவித்தனர், சிவபிரானின் நிறைந்த அருள் பெற்ற தொண்டர், தங்கள் ஊருக்கு வந்தார் என்று மிகவும் மகிழ்ந்தார்கள். இந்த செய்தியைத் தெரிவிக்கும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
பாடல் 1:
       கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல்
அடைந்தார் செல்லும் கதியே போற்றி
       அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல்
அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
       மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
       செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
To Continue 9 more songs -  go to the following link

Saiva devotional works Panniru Thirumurai (Thevaram, Thiruvachagam and others) songs explained





வேற்றாகி விண்ணாகி

பதிக எண்: 6.55      திருக்கயிலாயம்          திருத்தாண்டகம்
பின்னணி:
திருக்காளத்தி சென்ற அப்பர் பிரான், தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி திருப்பருப்பதம் (இந்நாளில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகின்றது; ஆந்திர மாநிலத்தில் உள்ள தலம்) சென்று அங்குள்ள இறைவனை வணங்கி பதிகம் அருளினார். அப்போது அவருக்கு திருக்கயிலாய மலை சென்று இறைவனை நேரில் காணவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தனது அடியார்களுடன், நெடிய பயணத்தை மேற்கொண்ட அப்பர் பிரான், வழியில் இருந்த கன்னடம், மாளவம், பைதிரம் (மத்திய பிரதேசம்) ஆகிய நாடுகளில் இருந்த காடு, மலை, ஆறுகளைக் கடந்து, வடநாட்டிலுள்ள காசி மாநகரை அடைந்தார். தன்னுடன் வந்தவர்கள் மிகவும் சோர்வு அடைந்திருந்த காரணத்தால், அவர்கள் அனைவரையும் காசி நகரில் விட்டுவிட்டு, அப்பர் பிரான் தான் மட்டும், தனது கயிலைமலைப் பயணத்தைத் தொடர்ந்து இந்திய நாட்டின் வடபகுதியில் உள்ள மலைப் பகுதியின் அடிவாரத்தை அடைந்தார்.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே
ஆள் என்னைக் கொண்டாய் போற்றி
       ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து
ஒலியே போற்றி
       ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம்
நால்வேதம் ஆனாய் போற்றி
       காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை
மலையானே போற்றி போற்றி

To Continue 9 more songs -  go to the following link






த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்
த்ரிஶாகைஃ பில்வபத்ரைஶ்ச அச்சித்ரைஃ கோமலைஃ ஶுபைஃ
தவபூஜாம் கரிஷ்யாமி ஏகபில்வம் ஶிவார்பணம்
கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடயஃ
காம்சனம் க்ஷீலதானேன ஏகபில்வம் ஶிவார்பணம்
காஶீக்ஷேத்ர னிவாஸம் காலபைரவ தர்ஶனம்
ப்ரயாகே மாதவம் த்றுஷ்ட்வா ஏகபில்வம் ஶிவார்பணம்
இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா னிராஹாரோ மஹேஶ்வராஃ
னக்தம் ஹௌஷ்யாமி தேவேஶ ஏகபில்வம் ஶிவார்பணம்
ராமலிம்க ப்ரதிஷ்டா வைவாஹிக க்றுதம் ததா
தடாகானிச ஸம்தானம் ஏகபில்வம் ஶிவார்பணம்
அகம்ட பில்வபத்ரம் ஆயுதம் ஶிவபூஜனம்
க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏகபில்வம் ஶிவார்பணம்
உமயா ஸஹதேவேஶ னம்தி வாஹனமேவ
பஸ்மலேபன ஸர்வாம்கம் ஏகபில்வம் ஶிவார்பணம்











No comments:

Post a Comment