.jpeg)
.jpeg)
.jpeg)
பக்தர்களுக்காக விதிக்கப்பட்ட வழிபாடுகளுள் மிகவும் உயர்ந்தது மனித வழிபாடாகும். உண்மையாகவே ஏதாவது வழிபாடு நடைபெற வேண்டுமென்றால் உங்கள் வசதிக்குத் தக்கவாறு ஏழைகள் ஒருவரையோ இருவரையோ சிலரையோ உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, நாராயணனாகக் கருதி அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்.
அன்பே குறிக்கோள், அன்பு செய்ய ஒரு பொருள் தேவை இல்லை. அன்பே கடவுள். ஆகவே ஆன்ம வடிவான கடவுளை பக்தியாலும் அடையலாம். நானே அவன். நாட்டை, நகரத்தை, மிருகங்களை, இந்த உலகத்தை நேசிக்காமல் ஒருவன் எவ்வாறு வேலை செய்ய முடியும்? பன்மையில் ஒருமையைக் காண ஆராய்ச்சி வழிகோலுகிறது. நாத்திகர்களும் ஆஜ்ஞேயவாதிகளும் சமுதாய நன்மைக்காகச் சேவை புரியட்டும்! அப்போது கடவுள் வருவார்.வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
சாதாரண அமாவாசை நாள்களில் மூன்று தலைமுறை முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை நாளில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனிப்பெருஞ் சிறப்பாகத் திகழ்கிறது.
No comments:
Post a Comment