ஜீவனெல்லாம் இறைவனென்ற ஞானத்திலே - தினம் ஜீவசேவை செய்யவேண்டும் வாழ்க்கையிலே நாளும் மனித கடவுளையே போற்றி நிற்போமே - பல நாமரூப பேதம் நீக்கி பூசை செய்வோமே கல்லுக்குள்ளே கடவுளை நாம் தொழுதது போதும் - நம் கண்ணெதிரில் வாழும் அவனை தொழுதிட வாரும் பசிவயிறாய் காட்சிதந்தால் உணவளித்திடுவோம் பனிகுளிரில் நடுங்கி நின்றால் உடையளித்திடுவோம் பாமரனாய் தோன்றி வந்தால் படிப்பளித்திடுவோம் - தன் பகுத்தறிவால் உயர்வதற்கு வழிவகுத்திடுவோம் கண்ணிழந்தும் காலிழந்தும் தோன்றும் மனிதனே - நம் கண்ணெதிரில் வாழ்ந்து வரும் தேவதேவனே மனிதவடிவில் வாழும் இவர்கள் மகாதேவனே - இந்த புனித ஜீவ தேவைகளை பூர்த்தி செய்வோமே ஊனக்குறைகாட்டி வந்தால் அன்பு காட்டுவோம் - அவர் மனநிறைவை பெறுவதற்கு ஊக்கமூட்டுவோ மனதுக்குள்ளே தன்னம்பிக்கை பாலை ஊற்றுவோம் - அவர் மனிதனாக நிமிர்ந்து வாழ பாதைகாட்டுவோம்