Sri Ramakrishna Vijayam, the Tamil monthly of the Ramakrishna Order, ranks No. 1 among the spiritual and cultural magazines in Tamil Nadu. Started in 1921, it has a circulation of 1,60,000 at present. The magazine reaches out to 2444 libraries, 140 Schools, 100 clinics and 200 orphanages and old age homes. Sri Ramakrishna Vijayam contains articles on spiritual and cultural topics, short stories and pictorial stories for children. It has special features like Youth Power, Teachers’ World, Students’ World, Sanatana Dharma and Purana and Itihasa among others.
" We are the servants of the Lord. Be you all helpers in this cause "
Swami Vivekananda
Ramakrishna Mission (Ceylon Branch)
Bird's-Eye View of Activities
Ramakrishna Mission (Ceylon Branch) is basically a Spiritual - Religious & Charitable organization engaged in social service. It was incorporated by a special Act of Parliament - Ordinance No. 8 of 1929. It is a worldwide organization, serving in various fields of human needs for more than 120 years - as service to man is service to God.
Religion as Sri Ramakrishna taught it was never vague or dismal. It went to the man where he was and lifted him up. It was not like an eagle which soars high in the air and calls to the tortoise, ‘Come up here.’ Can the tortoise ever hope to rise to the eagle? No, it can only say, ‘If you will come and lift me up, then I can go up there.’ So Sri Ramakrishna in his teaching came down and carried the man up by degrees. It gave him new hope and courage.
- Swami Ramakrishnananda (Sri ramakrishna and his Disciples, Pg. 109)
நமது வாழ்க்கையிலே அமைதி இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, நிறைவு இருக்கிறது. ஆனால் அது பூரணமாக இல்லை அவ்வப்பொழுது, கவலைகள் மனதை வாட்டுகின்றன. ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புக்கள்,பெற்றார்,உறவினர்,நண்பர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனம் அமைதியை இழக்கின்றது. நாம் நினைப்பதை, எதிர்பார்ப்பதை, அவர்கள் செய்வதில்லை, நாம் நினைத்தபடி நடந்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாதது போல தெரிகிறது. ஆம் இது உண்மைதான். இதுதான் உலகத்தின் நியதி.
இன்பம், துன்பம், இரண்டும் கலந்துதான் உலக வாழ்க்கை.
இன்பத்தை அனுபவிப்பதை போல, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் அதற்கு மனவலிமை தேவை. அந்த மன வலிமையை வளர்த்துக் கொள்வது வாழ்கையின் இன்றியமையாத அவசியமாகும்.
அதற்கான ஒரே வழி இறைவழிபாடு. இறை பக்தியை வளர்ப்பதன் மூலம், மனதிற்கு வலிமை பிறக்கிறது. வாழ்க்கை துன்பங்கள் லேசாகிவிடுகின்றன. அமைதி நிலைபெறுகின்றது.
இறைவழிபாட்டில் இரண்டு நிலைகள் உள்ளன.
புற வழிபாடு,
அக வழிபாடு.
நாம் இப்போது ஆக வழிபாட்டிலே சிறிது ஈடுபடுவோம்.
01.ஆரம்ப ஏற்பாடுகள் ;
நேராக நிமிர்ந்து அமருங்கள். இமைகளை லேசாக மூடுங்கள்.உடலை இறுக்காதீர்கள் கைகளை கோர்த்த வண்ணம் அமருங்கள். உங்கள் உடல் முழுவதும் அமைதியில் ஆழ்ந்து இருப்பதை உணருங்கள். கை, கால்கள் உடல் முழுவதும் லேசாக உள்ளன. உங்கள் முகம் அமைதியில் மலர்ந்து இருக்கின்றது. உங்கள் உள்ளமும் எந்த சிந்தனையும் இன்றி சலனமற்று அமைதியாக உள்ளது. சாந்தி எங்கும் சாந்தி அந்த அமைதி நன்கு உணருங்கள் அந்த அமைதியில் அழ்ந்திருங்கள்…………………… (சில வினாடிகள் போகட்டும்)
02.ஓங்கார உபாசனை ;
இப்பொழுது ஓங்கார உபாசனை செய்வோம். முதலில் நன்றாக மூச்சை இழுக்கவும். பின்னர் மிக நிதானமாக ஓம் என்று கூறவும். ஓங்காரத்தை நீட்டிக் கூறவும். ஓம் என்று கூறுவதை இரண்டு நிலைகளில் செய்ய வேண்டும். “ஓ”என்று ஆரம்பித்து சில வினாடிகள் சென்றபின் “ம்” என்று உதடுகளை மூடி நீட்டி கூறவேண்டும். இவ்வாறு பத்து தடவைகள் கூறவும். ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் அமைதி நம்புவதாக உணருங்கள். சில வினாடிகள் அந்த அமைதியில் ஆழ்ந்திருங்கள்.
03.சுவாசப்பயிற்சி ;
இப்பொழுது சுவாச பயிற்சி. உங்களது சுவாசத்தை கவனியுங்கள். சீரான ஓட்டம், சுவாசம் இரண்டு கட்டங்களில் நடைபெறுகின்றது. காற்று உள்ளே சென்று வெளியேறுகின்றது. இரண்டு நாசிகளில் ஊடாக சுவாசம் நடைபெறுகின்றது. சுவாசத்தை நன்கு கவனியுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒழித்து சுவாசத்தை கவனியுங்கள். நாசித் துவாரங்கள் வழியே காற்று உள்ளே செல்கிறது. நுரையீரல்களை அடைகின்றது. திரும்பவும் வெளியேறுகின்றது. ஒவ்வொரு சுவாசத்திற்கும் மனதில் அமைதி நிலை பெறுவதாக உணருங்கள். சில நிமிடங்களில் இந்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.
04. மானச பூசை;
இப்பொழுது மானச பூசை. உங்கள் இதயத்தில் பிரகாசமான ஒளியை காணுங்கள்.
எங்கும் ஒளி. கண்ணைப் பறிக்கும் ஒளி. அந்த ஒளியின் மத்தியில்
ஒரு அழகான தாமரை. நன்கு மலர்ந்த, நறுமணம் கொண்ட மலர். சிவப்பு நிறத்தில் நன்கு விரிந்த தாமரை. அதன் மென்மையான இதழ்களை உணருங்கள்…….
அந்த நறுமலரில், நீங்கள் தினசரி வழிபாடும் உங்கள் இஷ்ட தெய்வம் அமர்ந்திருப்பதை காணுங்கள்…. ஒளிபொருந்திய தேகம்……
அன்பும் அருளும் நிறைந்த திருமுகம்….. சச்சிதானந்த சொரூபம்…..
நம்முடைய இருப்பின், வாழ்க்கையின், அனைத்து இயக்கங்களுக்கும் காரணகர்த்தா… அவரை வணங்குங்கள்… மனதார வணங்குங்கள்… அன்போடு, பக்தி சிரத்தையுடன் வணங்குங்கள்… மலர் அஞ்சலி செய்யுங்கள்…
அந்த இறைவனை தியானம் செய்யுங்கள்… அவரது சாந்நித்தியத்தைப் பூரணமாக உணருங்கள். அவர் நமக்கு வெகு அண்மையில் உள்ளார். நம்மோடு எப்போழுதும் உள்ளார். அந்த இறை உணர்வில் சில வினாடிகள் மூழ்கியிருங்கள்….
நிலையற்ற இந்த உலகின் பிடியில் இருந்து விலகப் பிரார்த்தியுங்கள்.
இறைவனது சாந்நித்தியம், அந்த இறை உணர்வு உங்கள் உள்ளும் புறமும் நன்கு வியாபித்து இருப்பதாக உணருங்கள்…
அந்த தூய்மையை அருளை உணருங்கள்……… (சில வினாடிகள்)
உங்கள் உடல் மனது தூய்மை அடைந்துள்ளது. மனது வலிமை பெற்றுள்ளது… கவலை, பயம், சோர்வு நீங்கி, மனம் தெளிவு, பெற்றுள்ளது.
நிறைவு;
இப்பொழுது உங்கள் மானச பூசையை நிறைவு செய்யுங்கள்.
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி
----------------------------------------------------------------------------------------------- -உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. தானே தானாக நிற்கும் இது எங்கும் நிறைந்தது, ஏனெனில் இதற்கு உருவம் இல்லை. உருவமோ வடிவமோ இல்லாதது, காலம் மற்றும் இடத்தால் எல்லைப்படுத்தப் படாதது, அது எங்கும் இருக்கிறது; அனைவரிடமும் சமமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
is a phrase that Swami Vivekānanda used frequently,
quoting from the Svétashwatara Upanishad
Hear ye, children of immortal bliss. even ye that resides in Higher spheres! I have found the Ancient One, blazing like the sun, beyond all darkness. knowing Him alone you shall be saved from death over again.
மந்திரம்: ஓம் - சொல்லும் பொருளும் சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 1.6.3(vii)
ஓங்காரம் முழுமுதற் பொருளின் வேறுபாடற்ற வடிவத்தைக் குறிப்பதுபோல், மற்ற மந்திரங்கள் அதே பிரம்மத்தின் தனித்தனியான இயல்புகளைக் குறிக்கின்றன. இவை எல்லாமே இறைவனைப்பற்றி தியானம் செய்யவும் உண்மையறிவை அடையவும் உதவியாக இருக்கின்றன. ***********************************************************
Sri Ramakrishna Mahamantra Chanting ஸ்ரீ இராமகிருஷ்ண மஹா மந்திரம் ஜபித்தல்
Meditation Leads to Freedom
-Excerpts from ‘Healthy Mind, Healthy Body- New Thoughts on Health’
A Vedanta Kesari Presentation (P149)
Swami Turiyananda writes about meditation as a source of freedom from the world-based emotions that hold us in bondage:
Happiness and misery alternate in this world. Have you ever seen anyone completely free from them? It is impossible; this world is made up of pairs of opposites. By meditating on the Atman one can get rid of them. This does not mean that there will be no happiness or misery, but by God’s grace they won’t be able to perturb one.
Thus, meditation is essential in overcoming the undependable nature of what the world offers and developing a more consistent and enduring sense of well-being.
People’s own experience in practicing meditation has been that it enhances sense of control and increase their enjoyment of day-to-day living. More importantly, they find slowly developing a sense of inner strength and peace that is stable. They begin to discover a place within themselves that is ever present, comforting, and renewing, despite the circumstances and continual ups and downs in their daily lives.
Meditation can be a bridge between Eastern and Western paths to well-being. It has an ancient scientific history as being the central means to well-being in the East and a more recent history of documented scientific study in the West. The current difference is that in Western science it is viewed primarily as a means to physical and mental well-being that has physically observable results. Eastern thought begins at a deeper, more subtle level of satisfaction.
From this perspective, the object of meditation is rooted in the spiritual plane. The results cannot be detected by the tools of a science based on physical observations. Indeed, we use the term ‘spiritual’ because the very thing we are describing is metaphysical rather than physical in its manifestation.
Clearly, we can find temporary pleasure in the things of the world. However, a stable sense of well-being can only be found within. Meditation is a practice that can lead to an inner sense of peace and tranquility, it costs nothing, it is portable and it is available under all conditions.
The effects of meditation on well-being have been described by Swami Lokeswarananda in ‘Practical Spirituality’:
If you practice meditation regularly and in a correct manner, you become your own master and cease to be the slave of circumstances that you are now.
Once we accept the great truth that ‘life is difficult’ and that we cannot find our happiness in the things of this world, we can transcend this predicament. The search for well-being is our human right. The secret is that the well-being we seek lies deep within ourselves. The key is to move away from external sources of happiness and toward the internal source of well-being that lies awaiting. The nature of this quest is spiritual as opposed to physical and it is a journey we must ultimately make alone.