
Swami Vireshwarananda (1892-1985)
The Essence of Vedanta:
- Prajñānam Brahma
- Aham Brahmāsmi
- Tat Tvam Asi
- Ayamātmā Brahma
- प्रज्ञानं ब्रह्म prajñānaṃ brahma Consciousness (Prajnana -- pure, unqualified awareness) is Brahman (the ultimate reality). — Aitareya Upanishad 3.3, Rig Veda
- अहं ब्रह्मास्मि ahaṃ brahmāsmi I am Brahman -- the direct first-person realisation of identity with the Absolute. — Brihadaranyaka Upanishad 1.4.10, Yajur Veda
- तत् त्वम् असि tat tvam asi That (Brahman, the ultimate reality) thou (the individual self) art (are identical with). — Chandogya Upanishad 6.8.7, Sama Veda
- अयमात्मा ब्रह्म ayam ātmā brahma This Atman (Self) is Brahman (the Absolute). — Mandukya Upanishad 1.2, Atharva Veda
என்பது உபநிடதங்களின் மூலம் ஜீவனும் (உயிர்) பிரம்மமும் (இறைவன்) ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தின் பேருண்மையை விளக்கும் நான்கு முக்கியச் சொற்றொடர்கள் ஆகும்.
இவை நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன.
நான்கு முக்கிய மகாவாக்கியங்கள்
- பிரக்ஞானம் பிரம்ம: அறிவுணர்வே (பிரக்ஞை) பிரம்மன் என்று ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம் கூறுகிறது.
- அஹம் பிரம்மாஸ்மி: நானே பிரம்மம் (பரம்பொருள்) என்று யஜுர் வேதத்தின் பிருஹதாரண்யக உபநிடதம் உரைக்கிறது.
- தத் த்வம் அஸி: நீ அதுவாக இருக்கிறாய். அதுவே நீ அல்லது அந்தப் பிரம்மம் நீயாய் இருக்கிறாய் என்று சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம் விளக்குகிறது.
- அயம் ஆத்மா பிரம்ம: இந்த ஆன்மாவே பிரம்மன் என்று அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம் குறிப்பிடுகிறது.
மேலும்
ஏகமேவ அத்விதீயம் (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)
சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம்
(சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) - பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.
சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்.
ஈசா வாஸ்யம் இதம் சர்வம் - பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.
’நேதி நேதி’ - (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.
’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ - பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது.ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).
*************************************************************
ஈழத்துச் சித்தரான செல்லப்பா சுவாமிகள், தனது சீடர் யோகர் சுவாமிகளுக்கு உபதேசித்த, வாழ்க்கையின் உச்சகட்ட உண்மைகளை உணர்த்தும் நான்கு முக்கிய வாக்கியங்களே யோகர் சுவாமிகளின் மகா வாக்கியங்கள் எனப்படுகின்றன.

1
அருட்சோதித் தெய்வம் - எனை
ஆண்டுகொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்!!
பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்தத் தெய்வம் - உயர்
நாதாந்தத் தெய்வம்!!
இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணியநான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!!
தெருட்பாடல் உவந்து எனையும்
சிவமாக்கும் தெய்வம்!
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்!!
தாயாகித் தந்தையுமாய்த்
தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத
தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர்
மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை
வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக்
கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங்
காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந்
தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற
தெய்வமதே தெய்வம்.
1. இறைவனை ஜோதி(ஒளி) வடிவாகக் கண்ட வள்ளலார் "அருபெருஞ்சோதி" என்றே அழைத்தார்.
அந்த அருட்பெருஞ்சோதி தெய்வம் எனைத் தடுத்தாட்கொண்ட தெய்வம். பொன்னம்பலமாகிய சிதம்பரத்தே ஆனந்தக்கூத்தாடும் தெய்வம். நான்மறைகளும் போற்றும் தெய்வம். தத்துவஞானத்தையும், காரண காரியங்களையும் கடந்த தெய்வம். ( சைவ சித்தாந்தப்படி போதாந்த நிலை என்பது ஞானத்தயும்கடந்த நிலை. நாதாந்த நிலை என்பது காரிய காரணங்களைக் கடந்த நிலை. நாதாந்த நிலை அடைந்த ஒருவன் சிவலோகத்தைத் தன்னுள்ளே காண்கிறான்)
என் மன இருளகற்றி உள்ளொளி பெருக்கிய தெய்வம். நான் வேண்டியவற்றை வேண்டியவாறே எனக்கு அருளிய தெய்வம் . (அடிகளார் வேண்டியதுதான் என்ன - அவனருளன்றி வேறொன்றுமில்லை - அவனருளாலே அவன் தாள் வணங்கி). ஏன்னுடய எளியபாடல்களுக்கும் இரங்கி என்னையும் சிவமாக்கிய தெய்வம் (அடிகளார் பரசிவ நிலை எய்தி விட்டார். எனவே என்னையும் சிவமாக்கி - அ கம் ப்ரம்மாஸ்மி). பொன்னம்பலத்தே ஆனந்த நடமிடும் தெய்வம்..
2. தாயாய்த் தந்தையாய் எனைத்தாங்கும் தெய்வம் (அம்மையே அப்பா ஒப்பிலா மணியே). தனக்கு நிகர் இல்லாத தெய்வம்( தனக்குவமை இல்லாதான் ). தன்னை வாயாரத் துதிப்பவர் உள்ளக்கோயிலிலே வீற்றிருக்கும் தெய்வம். தன் திருவடிகளை என் தலையில் வைத்து எனக்கருள் மழை பொழிந்த தெய்வம்.கருணைக்கடலான தெய்வம்.பேரானந்தப் பெரு நிலையை எனக்கு முற்றும் காட்டிய தெய்வம். என்னை சேயாக்கி பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தூட்டும் தெய்வம்.. சிற்சபையில் நடமிடும் தெய்வம்.
*****************************************
.jpeg)





No comments:
Post a Comment