Showing posts with label women empowerment. Show all posts
Showing posts with label women empowerment. Show all posts

Wednesday, November 4, 2026

Deena Bandhu Sri Ramakrishna



  • தொண்டர் நாத:   அடியார்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே (நாதன்).
  • வண்டமிழ்ப் புல:   வளம் மிக்க, இனிமையான தமிழ் மொழியைப் பாடும் புலவர்களின் நெஞ்சில் உறைபவனே (அல்லது தமிழ் வடிவாகவே திகழ்பவனே).
  • செழுமதி யணிந்தோத்:   செழுமையான, குளிர்ந்த இளம்பிறைச் சந்திரனைத் தனது திருமுடியில் அணிந்த பெருமானே (சிவபெருமானின் சந்திரசேகர வடிவைக் குறிக்கும்).
  • தீன பந்துவே:   எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் உற்ற சுற்றமாக, சிறந்த நண்பனாக (பந்து) விளங்குபவனே.
  • வேதப் பொருளே:   நான்மறைகளாகிய வேதங்கள் யாவும் எதனை உன்னதப் பொருள் என்று போற்றுகின்றனவோ, அந்த வேதத்தின் உண்மைப் பொருளாய் விளங்குபவனே.

ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:


ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை, அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல் ; அஞ்ஞான இருளிலிருந்து ஓளிக்கு அழித்துச் செல்; ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத் வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞான ஓளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.