Wednesday, April 5, 2023

Ramakrishna Mission Sarada Welfare Centre, Point Pedro - April 2023


 

 








Evening Arati


Way to the Centre











  1. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உபதேசங்கள்மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே.
  2. இந்தப் பிறவியிலேயே ஒவ்வொருவரும் இறைவனை அடைந்துவிட முயலவேண்டும்.
  3. கடவுளை அறிவது தான் உண்மையான ஞானம். மற்ற எல்லா அறிவுகளும் அஞ்ஞானம் மாத்திரமே.
  4. காமினி-காஞ்சனத்தை (பெண்ணாசை-பொன்னாசையை) துறக்காமல் எந்தவித ஆன்மீக முன்னேற்றமும் சாத்தியம் இல்லை.
  5. ‘எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் ‘. கடவுளை அடைவதற்கு ஒவ்வொரு மதமும் காட்டும் வழிகளும் சரியானவையே.
  6. கடவுள் உருவம் உடையவர்; அதே சமயம் உருவம் இல்லாதவரும் கூட; என்னும் அவர் எத்தனையோ விதங்களிலும் இருக்கக் கூடும்.
  7. களிமண்ணால் செய்ததே ஆனாலும் கடவுளின் விக்கிரகத்தில் இருப்பது இறைவனின் சைதன்யமேயலவா? பக்தன் களிமண் விக்கிரகத்தை வணங்கினாலும் அதன் மூலம் தன்னைத் தான் வழிபடுகிறான் என்று கடவுளுக்குத் தெரியாதா என்ன!
  8. கடவுளைக் காண முடியும்; அவரோடு பேச முடியும். மூன்று விதமான ஆசைகள் -- அதாவது ஒரு உலோபிக்குப் பணத்தின் மீதுள்ள ஆசை, ஒரு தாய்க்குக் தன் குழந்தையின் மீதுள்ள ஆசை, மற்றும் ஒரு பதிவிரதைக்குத் தன் கணவன் மீதுள்ள ஆசை -- இவை மூன்றும் சேர்ந்தால் எத்தனை வலிவுள்ள ஒரு சக்தி மிக்க ஆசையாக இருக்குமோ அத்தகைய ஒரு ஆசை கடவுளைக் காண ஒருவனுக்கு இருக்குமேயானால் அவனுக்கு கடவுள் காட்சியளிப்பார்.
  9. தண்ணீரில் அமுக்கப்பட்டுள்ள ஒருவன் மூச்சுவிட எப்படிப் பரிதவிப்பானோ அப்படி ஒரு பரிதவிப்பு வந்தாலேயே கடவுளைக் காண முடியும்.
  10. பிரம்மமும் மாயையும் வெவ்வேறு இல்லை. பாலும் அதன் வெண்மையும் போல, தீயும் அதன் சுடும் தன்மையும் போல, பாம்பும் அதன் நெளிந்து நெளிந்து செல்லும் தன்மையும் போல பிரம்மமும் மாயையும் இணை பிரியாதவை.
  11. கடவுளை யாரால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்? அவரது ஒரு அம்சமே பெரிது என்றால், மற்றொரு அம்சமோ அதை விடப் பெரியது!
  12. கடவுளும் அவரது திரு நாமமும் வேறுவேறல்ல.
  13. கடவுளை அடைய, இந்தக் கலியுகத்துக்கு பக்தி மார்க்கம் தான் உகந்தது; உள்ளதிலேயே எளிமையானது.
  14. சுத்த மனமும், சுத்த புத்தியும் சுத்த ஆன்மாவும் ஒன்றே.
  15. பக்தன் யாரைக் காளி என்றழைக்கிறானோ, யோகி யாரை பரமாத்மா என்கிறானோ, ஞானி யாரை பிரும்மம் என்கிறானோ அவை ஒன்றே.
  16. ஆன்மிக ஞானம் பெற சத்சங்கம் (சாதுக்கள் கூட்டுறவு) தான் மிக உயர்ந்த உபாயம்.
  17. கடவுளின் செய்தி அவதார புருஷர்களிடமிருந்து தான் மனிதருக்கு வருகிறது.
  18. அவதார புருஷர்களைத் தரிசிப்பது என்பது கடவுளைக் காண்பதற்கு இணையானதே. அவதாரங்கள் வெறும் பத்துக்குள் அடங்கியவை அல்ல. பாகவத புரணம் இருபத்து நான்கு அவதாரங்கள் உண்டு; மேலும் அவதாரங்கள் உண்டு; அவதாரங்கள் கணக்கற்றவை என்கிறது.
  19. உண்மையான அன்பை இறைவன் தான் கொடுக்க முடியும்; பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பும், இறைவனின் அன்பே.
  20. உலகத்திற்கு நன்மை செய்து முன்னேற்றுவதா? நீ மக்களுக்கு நல்லது செய்து உத்தரிக்கும் அளவுக்கு உலகம் அத்தனை சிறிதா என்ன? உலகத்தை உத்தரிப்பது இறைவனின் வேலை. உலகத்து உயிர்களையெல்லாம் இறைவனின் அம்சமாகக் கண்டு அவர்களுக்கு அன்புடன் சேவகம் செய்வதன் மூலம் நீ உனக்குத் தான் உண்மையில் நன்மை தேடிக் கொள்கிறாய் என்பதை உணர்ந்து பணிவுடன் சேவை செய்.

இன்னும் விரிவாக ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் அறிய 
"ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்" - 
(ஸ்ரீ மகேந்திரநாத் குப்தர் எழுதியது) 
ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் கிளைகளில் கிடைக்கும்.

No comments:

Post a Comment