பிற்கால ஈழத்து சித்தர் பரம்பரை முன்னோடி கடையிற் சுவாமிகள்
கடையிற் சுவாமி -செல்லப்பா சுவாமி -யோகர் சுவாமி
கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875.
கடையில் சுவாமிகள் யோக சுவாமிகளின் குரு, செல்லாப்ப சுவாமிகளின் குரு ஆவார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது. ஆதிகடைநாதன் என்றும் அழைக்கப் படுகிறார்
ஆதிகடைநாதன் என்று மிகுந்த அன்புடன் கொண்டாடப்படும் யாழ்ப்பாணம் கடையிற்-சுவாமிகள் இலங்கையில் ஒரு அருட்பரம்பரைக்கு மூலவித்திட்ட குரு முதல்வராவார்.
இத்தவ சிரேஷ்டர், கன்னட தேசத்தவர்; யாழ்ப்பாணம் வருமுன்னர், சுவாமி முக்தியானந்தா என்ற நாமம் உடையவர். தமிழ் ,ஆங்கிலம், வடமொழி, கன்னடம ஆகிய நான்கு மொழிகளையும் பயின்றவர். உயர்ந்த உத்தியோகமான நீதிபதி தொழில் இல் இருந்து திடீரென ஏற்பட்ட வைராக்கியம் காரணமாக, அதனை உதறிவிட்டுத் துறவு பூண்டவர் .மைசூரைச் சேர்ந்த இம்மகானுக்கு, ஞானோபதேசம் அருளிய குரு மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் 32ஆவது தலைவராக வீற்றிருந்து, 1817ஆம் ஆண்டு தொடக்கம், 1879ஆம் ஆண்டு வரையில், அருட்செங்கோலோச்சிய அற்புத ஞானசித்தர் நரசிம்ம பாரதிஆவார் .
கடையிற் சுவாமிகளுடைய ஈழத்தின் முதல் சீடரும், யாத்திரை செய்தபோது அவரைத் தென்னாட்டில் தரிசித்து ஆசி பெற்றவருமான வண்ணார்பண்ணை வைரமுத்துச் செட்டியார் அவர்களே குறித்த மகானின் யாழ்ப்பாண வருகைக்குத் துணைக்காரணமானவர்.
யாழ்ப்பாணப் பெரிய கடை அண்மையில் சாமிகள் வாழ்ந்தாலும் அப்பொழுது பலருக்கு அவரின் மகிமை தெரியாதகாலம் ,
ஒரு கன்னடக்காரன் வை ரவச் செட்டியார் இந்தியாவில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தவர் இருக்கிறார் என்பது தான் அப்போதைய பேச்சு .
சாமிகளுக்கு பசித்தபோதேல்லாம் சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும்.
வைரமுத்துச் செட்டியார் சுவாமிகளின் பழைய தொண்டர்.
இவரின் குருபக்தியின் சின்னமாகப் பின்னாளில் உண்டாக்கப்பட்டதே கந்தர்மட அன்னசத்திரம்.
முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் , ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகான் , கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய 1881 ஆம் ஆண்டில் புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர்
சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.இவ்வாலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமான், ஸ்ரீ வாலாம்பிகை சமேத வைத்தியநாதன், கடையிற் சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகள் உள்ளன தனது இறுதி வாழ்நாளைக் கழித்துக் கடந்த-1881 ஆம் ஆண்டில் கடையிற் சுவாமிகள் சமாதியடைந்த இடத்தில் 1900 ஆம் ஆண்டில் சிவன் கோயிலுக்குரிய சகல பரிமாணங்களுடனும் கடையிற்சுவாமிகள் சமாதிச் சிவாலயம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.
கடையிற் சுவாமிகளுக்குச் சீடராக குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னையார், சடைவரதர், செல்லப்பாச் சுவாமி,சார்ஷன் சுவாமி எனப் பலரும் இருந்தார்கள் .
Swami Vivekananda (January 12, 1863 – July 4, 1902) is considered as one of the most influential spiritual educationist and thinker of India. He was disciple of Ramakrishna Paramahamsa and was the founder of Ramakrishna Math and Ramakrishna Mission.
He is considered by many as an icon for his fearless courage, his positive exhortations to the youth, his broad outlook to social problems, and countless lectures and discourses on Vedanta philosophy.
“The Swami’s mission was both national and international. A lover of mankind, he strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence.